உயர்கல்வி நிலையங்களா..ஹூஹூம் ..
சாதீய கூடங்கள்.
இன்று நேற்றல்ல காலம் காலமாக இந்த சாதீய கொடுமைகள் கல்வி நிலையங்களில் வேறூன்றி கிடக்கிறது.
70 களில் நான் படித்த மருத்துவ கல்லூரியில் சாதி வேறுபாடு தலைவிரித்து ஆடியது.
தனிமெஸ், தனி தட்டு என்ற ரீதியில் இருந்த காலம் அது.
கல்லூரியிலோ ஆசிரியர்களால் வீசப்படும் ஏளனப் பார்வைகளையும் தாண்டிதான் படிக்க வேண்டிய சூழ்நிலை.
அப்படியும் அன்று கற்று தேறிய மருத்துவர்கள் இன்று அவரவர் துறையில் சிறந்த டாக்டர்களாக திகழ்கிறார்கள்.
பொறுத்த பார்த்த அடக்கப்பட்ட மாணவர்கள் அணி திரண்டு சீறிப்பாய்ந்ததும் உண்டு.
நானே இருமுறை சாதி கலவரத்தில் பங்கு கொண்ட நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளது.அது ஒரு துரதிருஷ்டம் .
ஒதுக்கப்பட்டவர்கள் ஒடுக்கபட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று பல வித ரூபங்களில் மனஉளைச்சலை மேல்தட்டு வர்க்கம் தொடர்ந்து கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது.
இன்றும் எல்லா அரசினர் தலித் மாணவர் விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளை பார்த்தால் அவர்கள் எவ்வளவு கீழ் தரமாக நடத்த படுகிறார்கள் என்பதை கண்கூடாக காணலாம்.
ஐஐடி,எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிலையங்கள், கிரிக்கெட் போன்ற விளையாட்டு துறை இவை எல்லாவற்றிலும் ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் படும் துன்பங்கள் ஏராளமானவை.
திரைபடங்களிலோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாதி துவேசம் என்ற அமிலத்தை அவ்வப்போது பிரபலங்கள் முதல்கொண்டு உமிழ்ந்து விட்டுதான் செல்கிறார்கள் ..அன்மையில் வந்த பிச்சைக்காரன் பட பாடலையும் சேர்த்து..
மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதென்பது பெரும்பாபம்..
கொடுமையிலும் கொடுமை..
இதை தடுப்பதற்கு சட்டம் இருந்தும் அதை அமல்படுத்த தயங்கும் அரசு..
பலன் ?
சமீபத்திய நான்கு தொழிலாளர்களின் மரணங்கள் ..
கல்வியிலும் பொருளாதாரத்திலும் தலித் மக்கள் தன்னிறைவு அடைய பல இடர்பாடுகளை தாண்டியே ஆகவேண்டும்.
மேல்தட்டு மக்களின் சகிப்புத்தன்மை வளர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்...
அந்த நிலையை அவர்கள் தானாக அடையவேண்டும் அல்லது அடையவைக்க வேண்டும் ..
முன்னது நிரந்தரமானது , பின்னது தற்காலிகமானது.
அது வரை ரோகித்களும்,செந்தில் குமார்களும் உருவாகி அவ்வப்போது நம் காட்டுமிராண்டித்தனத்தை ஞாபகபடுத்திக்கொண்டே இருப்பார்கள்.